வணக்கம்.

தமிழ் தேசியம், மொழி, இனம் ஆகியவற்றை காக்கத் தவறிய தமிழக தலைவர்களின் மத்தியில், தமிழனின் வீரத்தை சம காலத்தில் உலகறியச் செய்து, தமிழ் இனத்தைப் பெருமை படுத்திய தமிழின தேசியத் தலைவரின் கொள்கைகளை பின்பற்றி நமது மொழியின் சிதைவையும், இனத்தின் பிளவையும் ஒன்றுபடுத்தி, தலைவரின் வழி நின்று, வென்று எடுப்போம்.

வேண்டும் விடுதலை!

0

Posted on : 8:18 PM | By : ஓவியம் | In : , ,


அன்னிய சக்திகளை அச்சுறுத்தலை மீறி வரலாறு காணாத பாதுகாப்புடன் இந்த வருடம் சுதந்திரம் வெற்றிகரமாக நடைபெற்றது. இது வருடா வருடம் இந்திய ஊடகங்களின் வழக்கமான செய்தி. சுதந்திரமாக ஒரு தேசிய கொடியை ஏற்ற முடியாத அவல நிலையில் நம்மை ஆள்பவர்கள். ஆகஸ்ட் 15 சுதந்திரம் என்று நினைத்து கொண்டாடும் வேளையில் இதன் தலைப்பு ஒன்றும் ஆச்சரியமில்லை.

சுதந்திரம் கிடைத்த போது நமது மக்கள் தொகை 30 கோடி. இன்று 100 கோடிக்கும் மேல். 30 கோடி மக்கள் தொகை இருந்தபோது இன்னும் 10 வருடங்களில் இந்திய சர்வதேச அரங்கில் ஒரு அங்கமாக செயல்படும் என்று அரசியல்வா(வியா)திகள் சொன்னார்கள். இதே போல் அடுத்த 10 வருடங்களில் நாம்....., அடுத்த 10 வருடங்களில் நாம்....., அடுத்த 10 வருடங்களில் நாம்....., இப்படி நம்மை ஆண்ட தலைவர்களின் ஒற்றுமையான அறிக்கை இது.

வெள்ளையன் முன்பு இங்கிருந்து ஆட்சி செய்தான், இப்பொழுது அங்கிருந்து ஆட்சி செய்கிறான். எப்படியும் ஆள்பவன் அவன்தான். இந்த நாட்டில் எது நடந்தாலும் நீதி முதல் நிதி வரை பெற உடனே ஒரு நல்லெண்ண பயணம். நல்லெண்ண பயணம்
நமக்கான பயணமாக இன்று வரை இல்லை என்பதே உண்மை.

மொத்த பஞ்சத்தில் நம்மை விட்டுப்போன வெள்ளையன். அங்கிருந்து கடனை கட்டு கட்டாக கொடுத்தவுடன் காணாததை கண்டது போல் பணத்தை மொத்தமாக பார்த்தவுடன் இவர்களுக்கு தலை, கால் புரியாமல் மக்களை மறந்து போக அங்கே தொடர்ந்தது வறுமை, பசி, பட்டினி சாவு...

மீண்டும் விடுதலையை பயணிக்கும் எங்களுக்கு ஒரே ஒரு முறை
நல்லதை செய்ய ஏங்குகிறோம்!

தொடரும் அவலங்களின் மத்தியில் எங்கள் பயணங்கள்.

விடுதலையை நோக்கி.......

சீற்றத்தின் சுதந்திர செய்தி இதுவே!

"வரலாறு காணாத பாதுகாப்புடன் எங்கள் சுதந்திர தினம்"
"அணி வகுத்த படைகளை விட எங்கள் பிரதமரை அரவணைத்த படைகளே அதிகம்"

Share this :

  • Stumble upon
  • twitter

Post a Comment