வணக்கம்.

தமிழ் தேசியம், மொழி, இனம் ஆகியவற்றை காக்கத் தவறிய தமிழக தலைவர்களின் மத்தியில், தமிழனின் வீரத்தை சம காலத்தில் உலகறியச் செய்து, தமிழ் இனத்தைப் பெருமை படுத்திய தமிழின தேசியத் தலைவரின் கொள்கைகளை பின்பற்றி நமது மொழியின் சிதைவையும், இனத்தின் பிளவையும் ஒன்றுபடுத்தி, தலைவரின் வழி நின்று, வென்று எடுப்போம்.

கௌரவமான அடிமைகள்

0

Posted on : 9:09 AM | By : ஓவியம்

மக்களுக்கு சேவை செய்ய எவ்வளவு அமைப்புகள் நாட்டில் இருந்தாலும். காவல் துறையே சிறந்தது என்று படித்து பட்டம் பெற்று. பல ஆண்டுகள் பயிற்சி எடுத்து உண்மையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்து இங்கு வருபவர்களை பதவி, பட்டம், கண்ணியம் மிகுந்த உடை ஆகியவற்றை களைந்து அம்மணமாக்கி, கேவலபடுத்தும் படிப்பு அறிவு இல்லாத அரசியல்வாதிகளின் பிடியில் அவர்களின் நிலை

ஆளும் அரசுகளின் கோபம். மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தாவி. பிறகு IPS அதிகாரியிடம் இருந்து மாறி. கடைசியாக காவல்துறையிடமிருந்து மக்களுக்கு வருகிறது. இவர்களின் கோபங்களுக்கு மக்களின் பிணங்களே மிச்சம். பிறகு அதே மந்திரியின் தலைமையில் விசாரணை கமிட்டி. எதிர்கட்சிகள் வழக்கம்போல் வெள்ளை அறிக்கை கேட்பார்கள். (வெற்று தாளை சமர்பிப்பதே வெள்ளை அறிக்கை) இதுவரை இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கிறதோ இல்லயோ. நீதி கிடைத்துவிடும் ஒரு இரங்கலுடன்.

சமூகத்தின் நச்சு உற்றாக இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் மிரட்டல்களின் உருவம் காவல் துறையின் வடிவில் ஏவப்படுகிறது. பிறகு கட்டபஞ்சாயத்து முதல் பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டுவதுவரை நீடிக்கிறது. சமீபத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஒரு அமைச்சர் அருகே இருந்தும் அனாதையாக இறந்துபோன அதிகாரி நிலை பற்றி யோசித்தோமா. இல்லை. தங்களின் கருத்தை உரிமையாக சொல்லகூடாத ஒரே துறை இதுதான். சொன்னால் மேற்கொண்டதே நடக்கும்.

மக்களின் பகலவனாய் செயல்படவேண்டிய காவல்துறையை பகடைகாயாக பயன்படுத்தும் அரசியல் சமூக விரோதிகளை ஒழித்தால்தான் நமக்கு வெளிச்சம் கிடைக்கும்.

சீற்றத்தின் செய்தி
நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சதி செயலின் பின்னணியை விசாரித்தல் கடைசியாக அது வந்து நிற்குமிடம் எதாவது ஒரு கட்சியாகத்தான் இருக்கும். ஆகவே இந்த நிலை தொடராதிருக்க சீரழிந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கும் காவல்துறையை தனிச்சையாக செயல்படவைத்து .முதல் கட்ட நடவடிக்கையாக அரசியல்வாதிகள் அனைவரையும் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து அவர்களின் மங்கிய அறிவை மலரசெய்தால்தான் இவர்களின் பணி மக்களுகாக தொடரும்.....

ஊனமுற்ற ஊடகவியல்

0

Posted on : 9:43 AM | By : ஓவியம்

செய்திதாள், வானொலி, தொலைகாட்சி, இணையம் வரை ஊடகவியலின் பங்கு நம் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது என்று சொல்லிகொண்டிருக்கும் வேளையில். அப்படிப்பட்ட ஊடகவியலின் இன்றைய நிலை என்ன? ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் வியாபாரம். இவர்களின் தேசப்பற்று ஒற்றுமை இதில் மட்டுமே காண முடிகிறது.

கதர் முதல் காவி வேட்டிவரை உள்ள அரசியல்வாதிகளுக்கு மற்றும் அம்பாணிகளுக்காக மட்டுமே செயல்படும் ஊடகமாக மாறிவிட்டது. கடந்த 20௦ வருடங்களில் எந்த செய்தியை கேட்டாலும், படித்தாலும், பார்த்தாலும் அவர்களுக்கு முக்கியமாக திகழ்வது சில தலைப்புகள் மட்டுமே. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை, அமெரிக்க பயணம், அரசியல்வாதிகளின் ஊழல், சாமியார்களின் படுக்கை அறை, சினிமாவின் அந்தரங்கம் மற்றும் மக்களுக்கும் நாட்டுக்கும் உள்ள தொடர்பை அவ்வப்போது நினைபடுத்தும் தேர்தல்.

ஆளும் கட்சியின் நிறத்தை சார்ந்தே இவர்களின் செய்தி அமைந்துவிட்டது. அரசியல் மற்றும் நட்சத்திர கூட்டத்தின் வாசலில் நின்று மானத்தை விற்று. பிச்சையெடுத்த செய்தியை கௌரவமாக தனது தொலைகாட்சியில் ஒளிபரப்பி அந்த பிச்சை போட்டவர்களையே மீண்டும் இங்கு கொண்டு வந்து விவாதம், கலந்துரையாடல், சாதனை என்ற தலைப்பில் பேசுவார்கள். ஆக இவர்கள் அவர்களிடமும். அவர்கள் இவர்களிடமும் வியாபாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இவர்களின் பரிமாற்றத்தில் எது சிறந்தது என்ற (TRP) TARGET RATING POINT கொடுமை வேறு. (TOTAL RUPEES POLITICS) சுழற்சி முறையில் மக்களிடம் இருந்து விளம்பரம் என்ற பெயரில் எந்த நிறுவனம் அதிக கொள்ளை அடிக்கிறதோ) விளம்பரம் என்ற வார்த்தையை வைத்து கொண்டு நமக்கான
செய்திகளை மழுங்கடித்து, நம் அரசியல் வழியாக விறுகொள்ள வேண்டிய பல்வேறு காரணிகளை புறம் தள்ளி, அன்றாட வாழ்க்கைக்கு போராடும் மக்களுக்கும் நாட்டுக்கும் வாங்கி கொடுத்த உலகில் 87வது இடம்.

சீற்றத்தின் செய்தி

வியாபார யுக்தி மக்களை விரைவில் சென்றடையவேண்டும் என்று, இந்திய தேசியக்கொடியில் ஏன் இருபுறமும் நமது சின்னம். ஒரு புறம் தேசத்தின் சின்னமும், மறுபுறம் அதிக பணம் கொடுக்க முன் வரும் நிறுவனத்தின் விளம்பரத்தை கொடுக்கலாம் என்று யாராவது முன் வந்தால் அதையும் நடைமுறைபடுத்த அரசாங்கம் தயங்காது.

ஊடகவியலாளர்களே, அரசியல்வாதிகள் மற்றும் நட்சத்திரங்களின் அந்தரங்கங்களை ஊடுருவி சென்று செய்தி சேகரிப்பதை புறந்தள்ளிவிட்டு காட்டந்தரையில் போராடும் மக்களை கல்லறைக்குள் போகாமல் கரையேற்ற உதவுங்கள்.

உங்களின் விமர்சனகள் மக்களின் விடுதலைக்காக இருக்கட்டும்.